கருப்பு தினம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Monday, 7 December 2015

கருப்பு தினம் !




அற்பர்கள் சிலரால் சொற்பம்
என்று நினைத்து தகர்க்கப்பட்டது

அயோத்தியில் நடந்த இழி செயல்
இதுவரை இல்லை நியாயம்

பாபர் மசூதி ! இடித்த வெறியர்கள்
உலகமே அறியும் நிகழ்வு இது

ஆண்டாண்டு காலம் இருந்தது
சர்ச்சை தோன்றி தரை மட்டம்

வழிபாட்டு தளம் மனிதன் இதயம்
மதம் அவனுள் வாழும் உணர்வு

மதங்களை இனி நேசியுங்கள் !
உணர்வுகளை என்றும் மதியுங்கள் !

உண்மை அறியும் ஒரு கனம்
டிசம்பர் 6 தந்த கருப்பு தினம் !

கவிஞர்:இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்