குடும்பம் கதம்பம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Saturday, 26 December 2015

குடும்பம் கதம்பம் !















பாசத்துடன் அரவணைப்பை கலந்து 
நேசத்துடன்  "குடும்ப தலைவன்"

செல்வமகளாய் பிறந்து பத்து 
 " மக்களை பெற்ற மகராசி "

தந்தைக்கு மந்திரி மூத்தமகள் 
அவசரஉதவிக்கு "டவுண் பஸ் "

குடும்பத்தின் மூத்த மகன்
"தாய்க்கு தலை மகன் "
அவர் கரம் பிடித்து வந்த 
முதல் "மருமகள் "

தெளிவுநிலை  நிதானம் காய் 
நகர்த்துவதில்"சாணக்கியன் "
உங்கள் துணைவி முதல் 
"மேல்நாட்டு மருமகள் "

நடுத்தர நிலை குடும்ப சுழல் 
குடும்பத்தில்  "உழைப்பாளி"
பணிவிடை உழைப்பு மணைவி 
குடும்பத்தில்"சுமைதாங்கி"

மார்க்கம் கற்று மதீனம் சென்று
பேராசிரியராய் உமரியில் "பட்டம்"
உங்கள் இல்லாலும் உங்கள் வழி
"மாமன் மகள் "

அத்தாவின் வேடந்தாங்கள் 
இனி உங்கள் வீடு
குடும்பத்தில் நீங்கள் போட்டது  
"ஏதிர் நீச்சல்"

அத்தாவின் அன்புமொழி 
மறுப்பேதும் சொல்லாது ஏற்றம்  
பெற ஏறி சென்ற "ஏணிபடிகள் "
உள்ளுக்குள் சம்பந்தம் விட்டு  
போகாது மணைவி 
உள்ளமெல்லாம் "கணவன்"

அன்றிலிருந்து இன்றுவரை 
புரியாத புதிர்தான் உன் கணக்கு 
"வரவு எட்டணா செலவு பத்தணா 
தன் மதி, செயல் பாடு 
தன் குடும்பம் தன் சொந்தம்  
கணவ☺️ன் "ஜாடிக்கேத்த மூடி "

தந்தை பாசம் தனித்து பெற்று
சென்ற பாதை சறுக்கி சென்று
புதிய விலாசம் தேடும் உன்   
உள்ளமெல்லாம் "பேராசை" 
செய் நன்றியை மறந்து
இள்ளால் போடும்"வேஷம்"

பெற்றோர்கள் கடைக்குட்டி
குடும்பத்தில் அன்பாய் பிறர்
நடிக்க,  பேருக்கு "பாச மலர்"

"குடும்பம் ஒரு கதம்பம்"

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்