சாலை விபத்து ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 25 December 2015

சாலை விபத்து !












சாலையில் வேகம் அல்ல
விவேகம் மிக அவசியம்


கவனம் சிதறும் போது
கட்டுப்பாடு கை இழக்கும்

ஓட்டுபவரின் கவனம் தவறினால்
வாழ்கையே ஆகிவிடும் மௌனம்

கண் மூடி திறப்பதற்குள் சாலையில்
சலனமில்லாத உன் தேகம்

போக்குவரத்து விதியை மதி
சிக்னல் தான்உன் தலை விதி

ஒலி கொடுத்து வழி கேளு - நீ !
ஆம்புலன்சுக்கு வழி விடு

மிதமான வேகம் என்றும்
தரும்சுகமான பயணம்

கட்டுப்பாடில்லா வேகம்
கட்டையில் வேகும் தேகம்

சாலை விபத்து இதை இனி 
தவிர்ப்பது உன் பொறுப்பு  

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்