ரமழான் வந்தது ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Wednesday, 16 December 2015

ரமழான் வந்தது !











ஷாபான் கடந்ததும் ரமழான் வந்திடும்
புண்ணியம் தேடும் புனித மாதம் இது


பசித்திருந்து விழித்திருந்து இனி 
படைத்தவனை நின்று வணங்கி

நம் பாவங்கள் போக்க துவா கேட்க
பன்மடங்கு நன்மை பெற்று தர 

வந்தது நமக்கு புனித ரமழான் நோன்பு
தந்திடும் மனம் நிறைவாய் கொண்டு

மூடப்பட்ட நரகம் ரமழான் முழுதும்
கட்டப்பட்ட செய்தானின் நிலையும்

வணக்கங்களுக்கு பன் மடங்கு கூலி
வான்மறை ஓதி சிரம் தாழ்ந்து கேளு

தராவீக் தொழுகை தவறாமல் நின்று
லைலத்துல் கதிரின் மகத்துவம் பெறு

கேட்கும் நம் துவாவை மலக்குமார்கள்
படைத்தவனிடம் பரிந்துரைக்கும் மாதம்

எங்கள் இறைவனே !

இந்த புனித ரமலானின் மேன்மையை
தந்து எமக்கு பாவங்களை மன்னித்து
நிறைவருள் தருவாய் ரஹுமானே !


கவிஞர்:இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்