பாடும் தாமிரபரணி! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 13 December 2015

பாடும் தாமிரபரணி!












பொதிகையில் தோன்றி
மலை தவழ்ந்து பூவாய்

வனதீர்த்தம் அருவி முகர்ந்து 
வாகையாய் ஓய்வெடுக்க

பரந்து , விரிந்த பாபநாசம் 
இயற்க்கையோடு இணைந்து  

அம்பையை அரவணைத்து 
ஒய்யாரமாய் நெல்லை வந்து 

தன் மறந்த பரநீராய் தாமிரபரணி
பயிர்களை செழிக்க செய்து

உழவர் பெருமகன்  வாழ்வை 
உயர்த்திவிட்டு உவமையாய் 

ஸ்ரீவைகுண்டம் அணையில்
சிங்காரமாய் வீற்றிருந்து

தவழும் இடமெல்லாம் சுவையாகி
வற்றாத ஜீவ நதியாய் வளம் தந்து 

தளராமல் சங்கமித்தாய் அந்த 
பழையகாயல் வளைகுடாவில்

என்றுமே எங்கள் தாகம் தீர்க்கும்
வற்றாத நீ "தாமிரபரணி " யாய்
தரணி செழிக்க வா பரணி பாடி !

கவிஞர்:இறைநேசன் 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்