எங்கள் வீட்டு மருமகள்!
இறைவனின்
நாட்டப்படி
ஷரியத்தின்
முறைப்படி
மஹ்ர் தந்து
மணமகளாய்
குடும்பத்தின்
குல விளக்கு
திருமறை பொருள்
உணர்ந்து
அருள்மறையை
கற்றுணர்ந்து
ஏட்டு கல்வியை
வீட்டிலிருந்து
கற்று பட்டம்
பெற்ற பட்டாதாரி
தலை மகனின் கரம்
பிடித்து
இணையும் உன்
குடும்பத்தில்
மச்சான்மார்களிடம்
பாசம்காட்டி
பெரியவர்களுக்கு பணிசெய்து
.
உரிமையோடு
பொறுப்புடன்
உள் அன்போடு பொறுமையாய்
சாந்த குணம் கொண்டு
சகிப்புத்தன்மையோடு
குறைகளை மறந்து
நிறைகளை
பகிர்ந்து
மகளாய் மருமகளாய் எம்
குலம்தழைக்க நலம்சிறக்க
எங்கள் வீட்டு மருமகளே !
கவிஞர்:இறைநேசன்


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்