கந்து வட்டி ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Thursday, 7 January 2016

கந்து வட்டி !












வறுமை நிலை வந்தினி 
வழி இன்றி கடன் வாங்கி 

கூட்டி கழித்து பார்த்தால்
வட்டி கணக்கு புரியாது

வட்டி தேதி கடந்து போனா
குட்டி போடும் இரட்டிப்பாக

அசல் பத்தி கேட்க மாட்டான்
வட்டிக்கு வந்து நிப்பான்

உழைச்ச பணம் போதாது
உறங்க போனா தூக்கமில்லை

தவணை வந்த கொடுக்கத்தான்
சல்லி பைசா கையில் இல்லை

மானத்தோடு வாழ முடியாது
நிகழும் மரணம் தினம் ஓன்று !

கந்து வட்டி !
தவணை தவறினால் மரணம் !

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்