ராசியில்லா ராஜா ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Monday, 7 March 2016

ராசியில்லா ராஜா !










பிறந்தது முதல் இன்று வரை
ஓடிக்கொண்டே இருக்கிறேன்

ஓய்வெடுக்க வழி இல்லை இனி
ஓடும் வலிமை உடம்பிலில்லை 

உடன் பிறப்பும் சிலருக்கு என்றும்
கடந்து போன கடன் பிறப்பு

தந்திரமாய் சொத்தை எழுதிவாங்கி 
தலைக்கும் தொப்பி போட்டு

இனி  ஏமாளிகள் இருக்கும் வரை
ஏமாற்றுபவர்கள் உலகில் பெருகும்

இன்னும் ஜான் ஏறினால் எனக்கு
முழம் சறுக்கும் நிலை

நான் ஒரு ராசி இல்லா ராஜா - என்
பாசத்துக்கு இல்லை உறவு !

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்