அடுத்த நொடி ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Monday, 7 March 2016

அடுத்த நொடி !













அடுத்த நொடியில் ஏதுவும் நடக்கும்
அறியா மனதில் ஆயிரம் நினைப்பு

நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் நாம்
மனக் கோட்டையில் ஒரு கனவு

உலக ஆசை எல்லோருக்கும் அதிகம்
உறங்கி எழுவது உறுதி இல்லை 

கிடைத்தவரை சேர்த்து வைத்தோம்
அனுபவிக்க நாம் இருப்போமா ?

உலகில் புகழ் இருக்கும் வரை 
உயிர் பிரிந்தால் ஒரு ஜனாஷா

நம் உயிர் கணக்கு ஒரு மனகணக்கு
படைத்தவன் அறிந்த முழுகணக்கு

காலத்தை கூட்ட தவணை இல்லை
கடந்த நாள் திரும்ப வருவதில்லை

கை சேதப்பட்டு கவலை இல்லை
கலங்கி வருந்தி பயனும் இல்லை

எஞ்சிய உள்ள கொஞ்ச நாளில்
அமல்களை நாமும் செய்வோம்

அடுத்த நொடியை அஞ்சி நாமும்
மறை வழி நாடி வாழ்வோம் கூடி

மறைவழி , இறைவழி இதை 
மாற்றமில்லாமல் கடைபிடி !

கவிஞர்.இறைநேசன்.




No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்