பிச்சைகாரன் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Saturday, 5 March 2016

பிச்சைகாரன் !











   

மனிதன் பிச்சைக்காரன் உலகில்
வருவதும் போவதும் வாழ்க்கை

போகிற வழி கூட இங்கே
சொந்தமில்லை யாருக்கும்

தாகத்திற்கு கிடைத்த தண்ணீர்
படைத்தவன் விதிப்படித்தான்

உணவு கூட அவனுக்காக எங்கோ
வைக்கப்பட்டது அவனே அறியாது  

தான் என்ற மமதை தேடி வந்ததா ?
இல்லை ! அவன் ஏற்றுக்கொண்டது

பண்பை இழந்த நாம் பாசத்தை
இனி வாங்க முடியுமா என்ன ?

பணத்தின் மாயை மதி இழப்பு
இணக்கமில்லை இதயத்தில்

கணக்கு போடும் நம் எதிர் காலம்
இதயத்தின் ஓட்டம் இறைவனிடம்

பொறுமை மாறும் போது பெருமை
பணம் புகழ் நிரந்தரமா ? உலகில் !  

காலங்கள் மாறும் காட்சியும் மாறும்   
மாற்றம் ஏற்றம் தருவது இறைவனே !



கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்