அற்பத்துளியில்
இருந்து எம்மை
உலகிற்கு
அற்புதமாக தந்தாய்
மேன்மை மிகுந்த
பெற்றோர்கள்
பூமியில்
நிறைவாக்கி தந்தாய்
எங்கள் ஈமான் உன்மீது உறுதியாக
எங்கள் இறை வேதம்
திரு“குரான்”
சங்கைமிகுந்த சன்மார்க்க நபி
போதனை மொழி எங்கள் வழி
வாழ்கையும்
வாழ்ந்தோம் பூமியில்
வசந்தமும்
இருந்தது வளர்சியில்
நிலை இல்லாத உலகம் விலை
பாவங்கள் கூடிக்கொண்டு
என்ன சொன்னது மார்க்கம்
ஆதாயம் தேடி உலகில்
பாசம் இனி வேசமானது மனைவி
மோகம் பெற்றவர் வீதியில்
வாரிசுக்கு வளம் பணம் தேடி
நிகழப்போகும்
மரணம் அறியாது
வாழ்வோம் என்ற இறுமாப்பு
பிறப்பும் இறப்பும் இறைவன்
உலக வாழ்வு நிரந்தரமில்லை
உறுதியான ஈமான் நிலையாக்கு
தொழுகை நேரத்துடன்
நிறைவாக்க
ரமலான் நோன்பினை நோற்று
ஜக்காத்தை தவறாது கொடுத்து
ஹஜ்ஜை நிறைவு
செய்ய
உனது பொருத்தம் தா ரஹுமானே !
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்